×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இகா, கார்லோஸ் முதலிடம்

வாஷிங்டன்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிக்கான ஒற்றையர் பிரிவு வீரர், வீராங்கனைகள் தரவரிசை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் முதலிடம் பெற்றுள்ளனர். டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நாளை கோலாகலமாகத் தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரதான சுற்றில் களமிறங்கும் வீரர், வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை யுஎஸ் ஓபன் நிர்வாகம் வெளியிட்டது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் முதல் நிலை வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தனது முதல் சுற்றில் ஸ்வீடன் வீராங்கனை ரெபக்கா பீட்டர்சனுடன் (92வது ரேங்க்) மோத உள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரராக ஸ்பெயின் நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ், 2வது இடத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இடம் பெற்றுள்ளனர். ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், ஹோல்கர் ரூனே (டென்மார்க்), கேஸ்பர் ரூட் (நார்வே) அடுத்த இடங்களில் உள்ளனர். அல்கராஸ் தனது முதல் சுற்றில் ஜெர்மனியின் டொமினிக் கோஃபருடன் (78வது ரேங்க்) மோதுகிறார். ஜோகோவிச் தனது முதல் சுற்றில் பிரான்சின் அலெக்சாண்டர் முல்லரை (85வது ரேங்க்) எதிர்கொள்கிறார்.

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இகா, கார்லோஸ் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Iga ,Carlos ,US Open ,Washington ,US Open Grand Slam ,Poland ,Dinakaran ,
× RELATED டபிள்யூடிஏ பைனல்ஸ் காஃபை வென்ற இகா