
கோபன்ஹேகன்: பி.டபுள்யு.எப் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் தகுதி பெற்றார். அரையிறுதியில் அகானே யாமகுச்சியுடன் (ஜப்பான்) மோதிய கரோலினா மரின், கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டை 23-21 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டில் அதிரடியாக புள்ளிகளைக் குவித்த மரின் 23-21, 21-13 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார்.
உலக சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு முன்னேறிய தொடர்களில் தோற்றதில்லை என்ற சாதனையை மரின் தக்கவைத்துக் கொண்டார். இதற்கு முன் 2014, 2015, 2018ல் அவர் அரையிறுதிக்கு முன்னேறி அதில் வெற்றி பெற்றதுடன் பைனலிலும் வெற்றியை வசப்படுத்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பைனலில் விளையாட உள்ளார்.
The post உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறி அசத்தினார் மரின் appeared first on Dinakaran.