×

கோயில் திருவிழாவில் மோதல் நர்சிங் கல்லூரி மாணவர் சரமாரி குத்திக்கொலை

அணைக்கட்டு: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த சின்னஊனை கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி இரவு அம்மன் கரகம் ஊர்வலம் நடந்தது. அப்போது, இளைஞர்கள் சிலர் நடனமாடினர். அப்போது ஓசூரில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர் புருஷோத்தமனும்(23) நடனமாடினார். அவருடன் தீபன்(28), தேவன் மற்றும் நண்பர்கள் ஆடியுள்ளனர். புருஷோத்தமனின் எதிர்வீட்டை சேர்ந்த பாலகணேசனும் நண்பர்களுடன் நடனமாடினார்.

அப்போது குடிபோதையில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், புருஷோத்தமனுக்கு ஆதரவாக தீபன், தேவன் உள்ளிட்டோர் சண்டையிட்டனர். பாலகணேசனுக்கு ஆதரவாக அவரது அண்ணன் மற்றும் தம்பிகளான பாபு(எ)யோகானந்தன், ஸ்ரீநாத், முனுசாமி, சுமன் ஆகியோர் வந்தனர். இதில் யோகானந்தன் ஆத்திரத்தில் கத்தியால் புருஷோத்தமனின் மார்பில் சரமாரியாக குத்தி உள்ளார். ரத்தவெள்ளத்தில் துடித்தவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிந்து 5 பேரை கைது செய்தனர்.

The post கோயில் திருவிழாவில் மோதல் நர்சிங் கல்லூரி மாணவர் சரமாரி குத்திக்கொலை appeared first on Dinakaran.

Tags : Collision Nursing College ,Chamari ,festival ,Mariamman Temple festival ,Chinnaoonam village ,Vellore district ,Amman ,Temple Festival ,Nursing College ,Dinakaran ,
× RELATED கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மலர்ச்சந்தையில் பூக்கள் விலை உயர்வு!