×

காங்கிரஸ் மாஜி அமைச்சரின் ரூ.6 கோடி சொத்து முடக்கம்

புதுடெல்லி: பஞ்சாபில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான சொத்துக்கள், வைப்பு தொகை உட்பட சுமார் ரூ.6 கோடி மதிப்பு சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பஞ்சாபின் டெண்டர் ஒப்பந்த முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் பாரத் பூஷன் அசு மற்றும் சிலருக்கு தொடர்பு இருப்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கடந்த 24 மற்றும் 25ம் தேதி முன்னாள் அமைச்சர் பாரத் பூஷனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பாரத் பூஷன் மற்றும் சிலருக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், வைப்பு தொகை உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post காங்கிரஸ் மாஜி அமைச்சரின் ரூ.6 கோடி சொத்து முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Congress ,New Delhi ,minister ,Punjab ,
× RELATED ‘மிஸ்டு கால்’ பிரச்சாரம் ராஜஸ்தான்...