×

தாது மணல் நிறுவனத்திடம் பணம் பெற்றதாக புகார் கேரள முதல்வருக்கு எதிரான மனு தள்ளுபடி

திருவனந்தபுரம்: எர்ணாகுளத்திலுள்ள ஒரு தாது மணல் நிறுவனத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் அந்த நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்கும், அவர் நடத்திவரும் சாப்ட்வேர் நிறுவனத்திற்கும் அந்த நிறுவனம் ரூ.1.72 கோடி பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது மகள் வீணா விஜயன் உள்பட தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கொச்சியை சேர்ந்த கிரீஷ் பாபு என்பவர் மூவாற்றுபுழா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதை நேற்று விசாரித்த நீதிமன்றம், பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் போதிய ஆவணங்கள் இல்லாமல் வழக்கு பதிவு செய்ய முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post தாது மணல் நிறுவனத்திடம் பணம் பெற்றதாக புகார் கேரள முதல்வருக்கு எதிரான மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chief Minister ,Ore Sand Company ,Thiruvananthapuram ,ore sand ,Ernakulam ,sand ,Dinakaran ,
× RELATED கனமழை பாதிப்பு குறித்து விசாரித்த...