×

அதானி முறைகேடு குறித்த விசாரணை ரூ.20,000 கோடி மோசடி முதலீட்டை கண்டுபிடிக்குமா?…செபிக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: அதானி குழும பங்கு முறைகேடு தொடர்பான விசாரணையில், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) இறுதி முடிவுக்கு வர முடியாமல் இருப்பது ஆழ்ந்த கவலை அளிப்பதாக காங்கிரஸ் கூறி உள்ளது. அதானி குழுமம் பங்குச்சந்தையில் பல்வேறு மோசடிகள் செய்து, தனது பங்குகளின் மதிப்பை செயற்கையாக உயர்த்தியதாக அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கடும் சர்ச்சையானது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் செபி விசாரணை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் விசாரணை நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது.

அதில் 24 குற்றச்சாட்டுகளில் விசாரணை முடிந்து விட்டதாகவும், 2ல் மட்டுமே பாக்கி இருப்பதாக, தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘வெளிநாட்டு போலி நிறுவனங்கள் மூலம் ரூ.20,000 கோடி முதலீட்டை அதானி குழுமம் மோசடியாக பெற்றதா என்பதை செபி கண்டுபிடிக்குமா? இந்த முக்கியமான கேள்விக்கு விடை கிடைக்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், அதானி மீதான மோசடி குற்றச்சாட்டில் செபி இறுதி முடிவுக்கு வர முடியாமல் இருப்பது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. இந்த விஷயத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தினால் மட்டுமே, பிரதமர் மோடிக்கு விருப்பமான குழுமத்தின் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும்’’ என்றார்.

The post அதானி முறைகேடு குறித்த விசாரணை ரூ.20,000 கோடி மோசடி முதலீட்டை கண்டுபிடிக்குமா?…செபிக்கு காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : SEBI ,Delhi ,Securities and Exchange Board of India ,Adani Group ,Congress ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...