×

திருச்சியில் ரோந்து பணியின்போது விபத்தில் உயிரிழந்த ஏட்டு குடும்பத்துக்கு ரூ25 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருச்சியில் ரோந்து பணியின் போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி மாநகர், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (45) கடந்த 30ம் தேதி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் மோதி காயமுற்று தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் தலைமைக் காவலர் ஸ்ரீதர் உயிரிழந்திருப்பது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திருச்சியில் ரோந்து பணியின்போது விபத்தில் உயிரிழந்த ஏட்டு குடும்பத்துக்கு ரூ25 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ettu ,Trichy ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,CM ,Dinakaran ,
× RELATED திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை...