×

மடகாஸ்கரில் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் சோகம்: மைதானத்தில் திடீர் நெரிசல் 13 பேர் பலி; 80 பேர் காயம்

அன்டனானரிவோ: மடகாஸ்கரில் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் மைதானத்தில் திடீர் நெரிசலில் சிக்கி 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 80 பேர் காயமடைந்துள்ளனர். மடகாஸ்கர் நாட்டில் இந்திய பெருங்கடல் தீவு போட்டிகள் அடுத்த மாதம் 3ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக தொடக்க நிகழ்ச்சி அந்நாட்டின் தலைநகர் அன்டனானரிவோவில் பரியா என்ற தேசிய மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடிய நிலையில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் இடித்து தள்ளியதில் சிலர் கீழே விழுந்தனர்.

இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் குழந்தைகள். மேலும் இந்த சம்பவத்தில் சிக்கி, 80 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதனை அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டியன் சே உறுதிப்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மடகாஸ்கர் நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தொலைக்காட்சியில் உரையாற்றும்போது, ஒரு நிமிடம் அமைதி காக்கும்படி கேட்டு கொண்டார் என அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

The post மடகாஸ்கரில் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் சோகம்: மைதானத்தில் திடீர் நெரிசல் 13 பேர் பலி; 80 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : at ,Madagascar ,opening ,Antananarivo ,Dinakaran ,
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...