×
Saravana Stores

மனித கடத்தல் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு: கல்லூரி பேராசியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் பயிற்சி

சென்னை: இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனம் – ICWO மற்றும் சென்னை பல்கலைக்கழகம் – UNOM இணைந்து ஹான்ஸ் செய்டல் பவுன்டேசன் – HSF உதவியுடன் மனித கடத்தல் மற்றும் மனித வியாபாரம் பற்றி கல்லூரி பேராசியர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இப்பயிற்சியில் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் வனிதா அகர்வால், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி நாயர் உள்ளிட்டோர் மனித கடத்தல் / மனித வியாபார தடுப்பு குறித்து பேசினர்.

மேலும் இப்ப பயிற்சியின் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை தற்காத்துக் கொள்ளவும் பேராசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. வழக்கறிஞர் நடராஜன், மருத்துவர் சஞ்சீவி பிரசாத், மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன் உள்ளிட்டோர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலந்து கொண்டனர். மேலும் சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post மனித கடத்தல் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு: கல்லூரி பேராசியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Chennai University for College Professionals ,Chennai ,Indian Institute for the Welfare of India ,ICWO ,University of Chennai ,UNOM ,Hans ,University of Chennai for College Professionals ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது