×

திமிரி அருகே திடீர் ஆய்வு அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு குடிநீரை காய்ச்சி வழங்க வேண்டும்

*சுகாதார துறையினர் அறிவுறுத்தல்

ஆற்காடு : திமிரி அருகே அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு குடிநீரை காய்ச்சி வடிகட்டி வழங்க வேண்டும் என திடீர் ஆய்வு செய்த சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மணிமாறன் உத்தரவின் பெயரில் ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள விளாப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட வரகூர், புதூர் ஊராட்சி புதூர் அங்கன்வாடி மையத்தில் சுகாதார மேற்பார்வையாளர்கள் பழனி, மணி, ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.

அதில் அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்து, அங்கன்வாடி பணியாளரிடம் மாணவர்களின் வருகை குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் சத்து மாவு உருண்டை தவறாமல் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தனர். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ருசி பார்த்து ஆய்வு செய்தனர். மேலும், குடிநீரை நன்றாக காய்ச்சி வடிகட்டி குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

அயோடின் கலந்த உப்பை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறி அயோடின் உப்பை பண்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி கூறினார்கள். அங்கன்வாடி மையத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள். அதனை தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு சுகாதார கல்வி வழங்குவது குறித்து கேட்டறிந்து பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கர்ப்பிணிகளுக்கு இணை உணவான சத்து மாவு உருண்டை தவறாமல் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தனர்.

The post திமிரி அருகே திடீர் ஆய்வு அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு குடிநீரை காய்ச்சி வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thimiri ,Ankanwadi ,Anganwadi ,Timiri ,
× RELATED கணக்கனேந்தல் கிராமத்தில் பாழடைந்து...