×

நெல்லியாளம் நகராட்சி பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்

*நகராட்சி தலைவர் துவங்கி வைத்தார்

பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலா பகுதியில் உள்ள நெல்லியாளம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை நகராட்சி தலைவர் சிவகாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

வட்டார கல்வி அலுவலர் வில்சன், நெல்லியாளம் நகர திமுக செயலாளரும், கவுன்சிலருமான சேகர், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரும் கவுன்சிலர் ஆலன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் கவுன்சிலருமான முரளிதரன், அவை தலைவர் பொன்ராஜ், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் கவுன்சிலர் பன்னீர்செல்வம், மாவட்ட பிரதநிதிகள் ராமச்சந்திரன், குமார், ஐடிவிங் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலா, கவுன்சிலர்கள் சாந்தி, சூரியகலா, சித்ரா மற்றும் இல்லம் தேடி கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், தலைமை ஆசிரியை லதா மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி பொறியாளர் வசந்தன் கூறுகையில்,“நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் மூலம் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெறுகின்றனர்’’ என்றார்.

அதேபோல் நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட ராக்வுட் பேரல் டிவிசன் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் டெர்மிளா பன்னீர்செல்வம் காலை சிற்றுண்டி திட்டத்தை துவக்கி வைத்தார். திமுக ஒன்றிய செயலாளர் சுஜேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் , கவுன்சிலர்கள் மகளிர் குழுக்களை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post நெல்லியாளம் நகராட்சி பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் appeared first on Dinakaran.

Tags : CM ,Nellyalam Municipal School ,Municipal President ,Bandalur ,Chief Minister ,Nelliyam ,Municipal ,middle ,school ,Devala ,Nellyam Municipal School ,Dinakaran ,
× RELATED மிக்ஜாம் புயலால் சென்னையில் 73 செ.மீ....