×

மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

மதுரை: மதுரையில் ரயில் பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட 39 பேருக்கு உதவிகள் செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் கூறினார். பின்னர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.

The post மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Maa ,Madurai ,Superamanian ,
× RELATED காவிரி பிரச்னை தீர்க்கப்படும்: கர்நாடக அமைச்சர் முனியப்பா பேட்டி