×

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

நாகை: கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை மற்றும் திருவாரூருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று நாகை மாவட்டம் திருக்குவளையில் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாளை நாகை கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. செல்வராஜ் மகள் திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதியம் திருச்சியில் இருந்து விமான மூலமாக சென்னை திரும்புகிறார்.

 

The post கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Nagai Ruler's Office ,stalin ,Nagai ,B.C. ,G.K. Stalin ,Chief Minister of the Chief Minister ,Dinakaran ,
× RELATED கலைஞரை போல விளிம்புநிலை மக்களுக்காக...