×

ஊட்டியில் கல்லூரி மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்பு

ஊட்டி : ஊட்டி ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரியில் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றனர். மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் உள்ள ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரியில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தனபால் தலைமை வகித்தார். துணை முதல்வர் அருண், கௌசல்யா, முருகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, கல்லூரி முதல்வர் தனபால் பேசுகையில்,‘‘18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. வாக்களிப்பது ஒவ்வொரு நாட்டு மக்களின் ஜனநாயக கடமை ஆகும். எந்த ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது. தேர்தலின் போது பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்,’’ என்றார்.
இதில், பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் இணைந்து 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழியை வாசித்தனர். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என கலந்து கொண்டனர்.

The post ஊட்டியில் கல்லூரி மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : OOTI ,JSS Pharmacy College ,
× RELATED ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரி சார்பில் மருத்துவ முகாம்