- பாருகல் மாகாண சபைகள் கட்சி
- கலியகவிளை
- குருகுலப் பேரரசர்
- குமாரி கேரள எல்லை
- கவுன்சிலர்கள் கட்சியின் பூகால் கட்சி
*விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மகிழ்ந்தனர்
களியக்காவிளை : குமரி கேரள எல்லைப்பகுதியான பளுகல் பேரூராட்சி அலுவலகத்தில் ஓணவிழா நடந்தது. விழாவிற்கு பேரூராட்சி தலைவர் லிஜி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜெயேந்திரன் முன்னிலை வகித்தார். ஓண விழாவை செயல் அலுவலர் வைரக்கண்ணு தொடங்கி வைத்தார். விழாவில் கவுன்சிலர்கள் செல்வராஜ், சினி, பிந்து, விஜயகுமார், கீதா, தீபா, லீலா, வாஹித், பிரவின், சந்திரபாபு, சித்ரலேகா, சுகலஜாம்மா உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர். விழாவில் தீபமேற்றுதல், அத்தப்பூக்களம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
ஆண் கவுன்சிலர்களுக்கும், பெண் கவுன்சிலர்களுக்கும் தனித்தனியாக விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. மியூசிக் சேர், ஸ்பூன் லெமன் விளையாட்டு, பிஸ்கட் கடித்தல், பாடல் போட்டிகள் ஆகியன நடந்தது. விளையாட்டுப்போட்டிகளை காண அப்பகுதி பொதுமக்கள் திரளாக பங்கேற்று கண்டு களித்தனர். பாஜக, மார்க்சிய கம்யூனிஸ்டு, திமுக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளையும் சேர்ந்த கவுன்சிலர்கள் கட்சி பேதமின்றி விளையாடி மகிழ்ந்தது ஓண விழாவின் அர்த்தத்தை புரிய வைத்தது.
The post பளுகல் பேரூராட்சி கவுன்சிலர்கள் கட்சி பேதமின்றி ஓணம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.