×

தமிழ்நாட்டை சுற்றிப்பார்க்க வருகை தந்து மரணத்தை தழுவிய பயணிகளின் குடும்பங்களுக்கு இரங்கல்: வைகோ வேதனை

சென்னை: மதுரை அருகே நடந்த ரயில் தீ விபத்து தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரைக்கு ஆன்மீக சுற்றுலா வந்திருந்தோர் இருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவிலிருந்து ஆன்மீக சுற்றுலாவிற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று தமிழ்நாட்டிற்கு வந்தனர்.

இவர்கள் நேற்று நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலையில் மதுரை வந்தடைந்தனர். இவர்களின் ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ரயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலிண்டர் மூலம் சமைக்க முற்பட்டுள்ளனர் அப்போது எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 5:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு 10 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விபத்து குறித்து அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்,

மதுரை ரயில் தீ விபத்து- ஆளுநர், வைகோ இரங்கல்

சென்னை: மதுரை அருகே நடந்த ரயில் தீ விபத்து தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். ரயில் தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார். மதுரையில் ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் சட்டவிரோதமாக பயன்படுத்திய சிலிண்டரால் விபத்து ஏற்பட்டு 10 பேர் பலியாகினர்.

வைகோ இரங்கல்

மதுரை அருகே ரயில் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை சுற்றிப்பார்க்க வருகை தந்து மரணத்தை தழுவிய பயணிகளின் குடும்பங்களுக்கு இரங்கல் என வைகோ கூறியுள்ளார்.

 

The post தமிழ்நாட்டை சுற்றிப்பார்க்க வருகை தந்து மரணத்தை தழுவிய பயணிகளின் குடும்பங்களுக்கு இரங்கல்: வைகோ வேதனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vaiko Angam ,Chennai ,Governor RN ,Ravi ,Madurai ,
× RELATED மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல...