×

சென்னை திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் செத்து மிதக்கும் 4 டன் மீன்கள்; அதிகாரிகள் ஆய்வு..!!

சென்னை: சென்னை திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் 4 டன் மீன்கள் செத்து மிதக்கின்றன. திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் கூவம் ஆற்றில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கூவம் ஆற்றில் நச்சு கலந்த தண்ணீர் ஏதாவது கலக்கப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. இறந்த மீன், தண்ணீர் மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப நகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

The post சென்னை திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் செத்து மிதக்கும் 4 டன் மீன்கள்; அதிகாரிகள் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Kouvam river ,Chennai Thiruvedudu ,Chennai ,Kouvam ,Chennai Thiruvedu ,Thiruvedu ,Govam river ,Chennai Tiruvedu ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...