×

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!!

நாகை: நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி அருண் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். 115 காவல் நிலையங்களின் சட்டம் ஒழுங்கு, பதியப்பட்ட வழக்குகளின் விபரம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. காவலர்களின் தேவைகள் குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Nagai District Ruler's Office ,Chief Minister ,MC G.K. ,Stalin ,Nagai ,Nagai District Guror's Office ,G.K. ,Mayeladuthurai ,Thiruvarur ,Nagai District Collector's Office ,B.C. ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…