- விவசாய வளர்ச்சிக் குழு
- ரெங்கநாதபுரம்
- சத்திரையூர்
- தரியூர்
- கிராம விவசாய வளர்ச்சி குழு
- ரெங்கநாதபுரம்
- தரியூர், திருச்சி மாவட்டம்
- சத்தையூர்
- தின மலர்
துறையூர், ஆக.26: திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த ரெங்கநாதபுரத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 25 முன்னோடி விவசாயிகளுக்கு கிராம வேளாண் முன்னேற்றகுழு பயிற்சி அளிக்கப்பட்டது வேளாண்மை உதவி இயக்குநர் ரவி தலைமை வகித்தார். விஏஓ ஐஸ்வர்யா, ஊராட்சி மன்ற தலைவர் சரிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் பேசுகையில், இந்த குழுவின்நோக்கம், உறுப்பினர்கள் செய்ய வேண்டிய தொழிநுட்பங்களை பிற விவசாயிகளுக்கு கொண்டு சேர்த்தல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முக்கிய செயலாக்க பணிகள், வழங்கப்படும் இடுபொருள்கள், மானியங்கள், நெல் சாகுபடியில் வரப்பு பயிராக பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்தல், நெல்லுக்கு பின் பயறு சாகுபடி செய்தல், சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்தல், விரிவாக்க மையத்தில் உள்ள இடுபொருள்கள், மானியங்கள்பற்றி விளக்கி கூறினார்.
வேளாண் பொறியாளர் சிவ சண்முகம் பேசுகையில், பழைய மின் மோட்டார்களை மானியத்துடன் மாற்றிக்கொள்ளுதல், குறைவான வாடகையில் உழவு இயந்திரங்கள், மானியத்தில் பவர் டில்லர், டிராக்டர், பவர் வீடர் போன்றவற்றை பெற்று பயன்பெறலாம் என்று கூறினார். கிராம முன்னேற்ற குழுவின் பொறுப்பு விதைசான்று உதவி அலுவலர் கண்ணன், விதை உற்பத்தி, அரசுவழங்கும் உற்பத்தி மானிய விபரங்களை எடுத்துக்கூறினார். துணை வேளாண் அலுவலர் வடிவேல் நுண்ணீர் பாசன திட்டங்களை கூறி உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். தோட்டக்கலை உதவி அலுவலர் சந்தோஷ்குமார் பேசுகையில், துறை திட்டங்கள், மானியங்களை கூறி வெங்காயத்தில் நுனி கருகல், கோழிக்கால்நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கி கூறினார். வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வட்டார தொழிநுட்ப மேலாளர் அன்பழகன் வரவேற்று அட்மா திட்ட செயலாக்கம் குறித்து பேசினார். உதவி தொழில் நுட்ப மேலாளர் சரவணன் நன்றி கூறினார்.
பயிற்சியில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் , முன்னோடி விவசாயிகள் என 25 நபர்கள் கலந்து கொண்டனர். மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் ெதாடங்கப்படும் திருச்சி மற்றும் சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதற்கான ஆய்வு பணிகள் நிறைவடைந்து விட்டது. திருச்சியில் மெட்ரோ பணிகள் விரைவில் தொடங்கப்படும். திருச்சி மாநகராட்சியில் விடுபட்ட 9 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ள ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி விரிவுப்படுத்தப்படும்போது அந்தந்த பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
The post துறையூர் அடுத்த ரெங்கநாதபுரத்தில் வேளாண்மை முன்னேற்றகுழு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.