×

திருவாரூர் மாவட்டத்தில் 777 அரசு பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: சம்மட்டிக்குடிகாடு பள்ளியில் அமைச்சர் டிஆர்பி.ராஜா துவக்கி வைத்தார்

மன்னார்குடி, ஆக. 26: திருவாரூர் மாவட்டத்தில் 777 அரசு பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் நேற்று விரிவாக்கம் செயயப்பட்டது. சம்மட்டிக்குடிகாடு அரசு பள்ளியில் அமைச்சர் டிஆர்பி.ராஜா தொடங்கி வைத்தார். நாகை மாவட்டம் திருக்குவளை கிராமத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கல்வி பயின்ற அரசுப் பள்ளியில் முதலமைச்சரின் விரிவுபடுத்தப் பட்ட காலை சிற்றுண்டி உணவு திட்டத்தினை முதலவர் முக ஸ்டாலின் நேற்று காலை துவங்கி வைத்தார். இதையடுத்து, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை ஊராட்சி சம்மட்டிக்குடிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவுப் படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தொழில் முத லீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் .டிஆர்பி.ராஜா நேற்று காலை தொடங்கி வைத்தார்.

அப்போது மாவட்ட கலெக்டர் சாரு, மாவட்ட ஊராட்சி மற்றும் மாவட்ட திட்டக்குழு தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் உடனிருந்தனர். விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றப் பேர வை விதிகளில் விதி எண்.110-ன் கீழ் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, முதற்கட்டமாக மன்னார்குடி நகராட்சி தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஊரக பகுதிகள் மற்றும் ஊரக பகுதி ஒட்டியுள்ள பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுப்படுத்தப் பட்டுள்ளது.

அதன்படி, நாகப்பட்டினம் மாவட் டம், திருக்குவளை ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. அதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள 750 அரசு பள்ளிகள் மற்றும் ஊரக பகுதி ஒட்டியுள்ள பேரூராட்சி பகுதியிலுள்ள அரசு பள்ளிகள் 27 ஆக மொத்தம் 777 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ள முதலமை ச்சரின் காலை உணவு திட்டம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, உதவி இயக்குநர் (ஊரா ட்சிகள்) சௌந்தர்யா, வட்டாட்சி யர் கார்த்தி, பிடிஓக்கள் சிவக்குமார், விஸ்வ நாதன், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலை வர் கருடா இளவரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துவேல், சித்தேரி சிவா, வக்கீல் கவியரசன், மாவட்ட கல்விக்குழு தலைவர் கலைவாணி மோகன், மாவட்ட கவுன்சிலர் சோபா கணேசன், ஊராட்சி மன்றத்தலைவர் ஜோதி ரா ஜா, பள்ளி தலைமையாசிரியர் லதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளா ட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் 777 அரசு பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: சம்மட்டிக்குடிகாடு பள்ளியில் அமைச்சர் டிஆர்பி.ராஜா துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : District ,Minister ,TRP.Raja ,Sammattikudikadu School ,Mannargudi ,Tiruvarur district ,Sammattikudikadu ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி