×

பேராவூரணியில் வருவாய் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பேராவூரணி, ஆக. 26: பேராவூரணி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் ஜெயதுரை தலைமை வகித்தார். மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியன், வட்ட பொருளாளர் கிள்ளிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பேராவூரணியில் வருவாய் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Revenue Department Officers' Association ,Peravarani ,Peravurani ,Tamil Nadu Revenue Officers Association ,Peravoorani ,Dinakaran ,
× RELATED நூறுநாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்