×

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இளம் பெண்ணுக்கு நவீன செயற்கை கை பொருத்தி சாதனை

திருவண்ணாமலை, ஆக. 26: திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், விபத்தினால் கை இழந்த பெண்ணுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அதி நவீன செயற்கை கை பொருத்தப்பட்டது. திருவண்ணாமலை அடுத்த மேல் கச்சிராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சர்மிளா(19). இவர், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த சாலை விபத்தில் வலது கையை இழந்தார். இந்நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடலியல் மற்றும் புனர்வாழ்வு பிரிவு சார்பில், சர்மிளாவுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அதி நவீனஇயற்கை கை பொருத்தப்பட்டது.

மேலும், செயற்கை கையை பயன்படுத்துவது தொடர்பாக மருத்துவ குழுவினர் தொடர்ந்து ஒரு மாதம் பயிற்சி அளித்தனர். அதன் மூலம், தற்போது செயற்கை கைக்கொண்டு சுயமாக இயல்பான பணிகளை மேற்கொள்ளும் நிலைக்கு ஷர்மிளா முன்னேறி உள்ளார். இந்நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக செயற்கை பொருத்திய மருத்துவ குழுவினர்களை கல்லூரி முதல்வர் அரவிந்த் பாராட்டினார். அப்போது, கண்காணிப்பாளர் பால சுப்ரமணியம், நிலைய உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் அரவிந்தன், பிஎம்ஆர் துறை மருத்துவர்கள் சதீஷ் தங்கம், யுவராஜ், பிசியோ தெரபிஸ்ட் கிருஷ்ணகுமார், நடராஜன், மற்றும் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் வீரராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இளம் பெண்ணுக்கு நவீன செயற்கை கை பொருத்தி சாதனை appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Thiruvannamalai Government Medical College Hospital ,
× RELATED மகாதீபம் 40 கி.மீ. சுற்றளவு வரை...