×

சங்கராபுரத்தில் 5ம் தேதி கடையடைப்பு போராட்டம்: அனைத்து வியாபாரிகள் சங்கம் தீர்மானம்

 

சங்கராபுரம், ஆக. 26: வடபொன்பரப்பி குறுவட்டத்தை சங்கராபுரம் வட்டத்தில் இணைக்க கோரி, சங்கராபுரத்தில் வருகிற 5ம்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த அனைத்து வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தை இரண்டாக பிரித்து வாணாபுரத்தை மையமாக கொண்டு புதிய வட்டமாக பிரிக்கப்பட்டது. ஆனால் சங்கராபுரத்துக்கு மிக அருகில் உள்ள வடபொன்பரப்பி குறுவட்டத்தை வாணாபுரம் வட்டத்தில் சேர்த்ததால், பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. பேருந்து வசதி இல்லை, நீண்டதூரம் செல்ல வேண்டும்.

எனவே வடபொன்பரப்பி குறுவட்டத்தை மீண்டும் சங்கராபுரம் வட்டத்தில் இணைக்க கோரி அனைத்து பொது சேவை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து சங்கராபுரம் அனைத்து பொது சேவை அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் இணைந்து தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். வருகிற செப்டம்பர் 5ம் தேதியன்று சங்கராபுரம், வடபொன்பரப்பி, மூங்கில்துறைப்பட்டு, புதுப்பட்டு ஆகிய இடங்களில் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைத்துவது என தீர்மானம் நிறைவேற்றபட்டது.

The post சங்கராபுரத்தில் 5ம் தேதி கடையடைப்பு போராட்டம்: அனைத்து வியாபாரிகள் சங்கம் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Shankarapuram ,All Traders Association ,closure ,Sankarapuram ,Vadaponparappi ,CD ,Dinakaran ,
× RELATED விஷச் சாராயம்: மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது