×

மின் இணைப்பு பெயர் மாற்ற காலஅவகாசம்: மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

 

விருதுநகர், ஆக.26: மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு முதல்வருக்கு மக்கள் நீதி மய்யம் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் மின்வாரிய அலுவலகங்களில் ஜூலை 24 முதல் ஆக.24 வரை நடைபெற்று வந்தது. தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பம் அளித்தவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் குறைந்த செலவில் பெயர் மாற்றம் செய்து தரப்பட்டது.

இதில் 2 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் பயன்பெற்றனர். நீண்ட வருடங்களாக பெயர் மாற்றம் செய்ய முடியாமல் இருந்தவர்களில் 50 சதவீதம் பேர் இதுவரை பெயர் மாற்றம் செய்துள்ளனர். மீதமுள்ள 50 சதவீத மின் இணைப்புதாரர்கள் பெயர் மாற்றம் செய்யாமல் உள்ளனர்.பெயர் மாற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்தால் பெயர் மாற்றம் செய்யாமல் உள்ள மின் இணைப்புகளை மாற்றம் செய்து நூறு சதவீத மின் இணைப்புகள் பயனாளிகளின் பெயரில் மாற்றமாகிவிடும். மக்கள் உரிய பயன்பெறும் வகையில் சிறப்பு முகாமினை கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து உத்தரவிட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

The post மின் இணைப்பு பெயர் மாற்ற காலஅவகாசம்: மக்கள் நீதி மய்யம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : People's Justice Center ,Virudhunagar ,Justice ,Dinakaran ,
× RELATED நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதலை தடுப்பது எப்படி? வேளாண்துறை ஆலோசனை