×

2 லாரிகளில் மண் கடத்திய இருவர் கைது

போச்சம்பள்ளி, ஆக.26: மத்தூர் இன்ஸ்பெக்டர் கெளதம் மற்றும் போலீசார், தொகரப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் இருந்த தொகரப்பள்ளியை சேர்ந்த பலராமன்(52), மணி(77) ஆகியோரை கைது செய்து, 4 யூனிட் மணலுடன் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

The post 2 லாரிகளில் மண் கடத்திய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Bochampally ,Mathur Inspector ,Gautham ,Thogarapally ,Dinakaran ,
× RELATED பயிற்சியாளராக டிராவிட் நீடிப்பு: கவுதம் காம்பீர் வரவேற்பு