×

திண்டுக்கல்லில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி: மேயர் துவக்கி வைத்தார்

 

திண்டுக்கல், ஆக. 26: திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை மேயர் இளமதி நேற்று துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாநகராட்சியின் 11வது வார்டுக்கு உட்பட்ட தொந்தியாபிள்ளை ஆரம்பப்பள்ளி அருகில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், வார்டு தி.மு.கழக நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், பணியாளர்கள் பங்கேற்கின்றனர்.

The post திண்டுக்கல்லில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி: மேயர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Mayor ,Ilmati ,Dindigul Corporation ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...