×

3 மசோதாக்களுக்கு இந்தியில் பெயர்; நாடாளுமன்ற நிலை குழுவில் தயாநிதி மாறன் எம்.பி கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசு 3 சட்ட மசோதாக்களுக்கு இந்தியில் பெயர் சூட்டியுள்ளதற்கு நாடாளுமன்ற குழு கூட்டத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சிய சட்டத்துக்கு பதில் புதிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய சட்ட மசோதாக்களுக்கு பாரதிய நகரிக் சுரக்சா சன்ஹிதா, பாரதிய நியாய சன்ஹிதா, சாட்சிய மசோதா என இந்தியிலேயே பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்த மசோதாக்கள் உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த நிலைக்குழுவின் கூட்டத்தில் உள்துறை செயலாளர் அஜய் பல்லா மசோதாக்கள் குறித்து விளக்கினார.

அப்போது, மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசுகையில், ஒன்றிய அரசு சட்ட மசோதாக்களுக்கு இந்தியில் பெயர் வைத்துள்ளது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 348-க்கு எதிரானது. இந்தி பேசாத தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கும் இந்த மசோதாக்களை எதிர்க்கிறோம் என்றார். தொடர்ந்து, 3 மசோதாக்களில் உள்ள குறைகள், இந்தி பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் 3 பக்க கடிதத்தையும் தயாநிதி மாறன் அளித்தார். அதில், கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர், ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு விதிக்காததற்கும் தயாநிதி மாறன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

The post 3 மசோதாக்களுக்கு இந்தியில் பெயர்; நாடாளுமன்ற நிலை குழுவில் தயாநிதி மாறன் எம்.பி கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Dayanidhi Maran ,Parliamentary Standing Committee ,New Delhi ,DMK ,Union government ,Dayanidhi… ,Dayanithi Maran ,Dinakaran ,
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...