×

சந்திரயான்-3 விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து பிரதமர் மோடி இன்று பெங்களூரு வருகை

பெங்களூரு: சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தென்துருவத்தில் 23ம் தேதி மாலை வெற்றிகரமாக தரையிறங்கியது. வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து இந்தியா திரும்பும் பிரதமர் மோடி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு காலை 5.55 மணிக்கு வருகிறார். விமான நிலையத்தில் 30 நிமிடங்கள் ஓய்வு எடுக்கிறார்.

அதை தொடர்ந்து காலை 6.30 மணிக்கு கார் மூலம் பெங்களூரு பீனியாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திற்கு (இஸ்ரோ) வருகை தரும் பிரதமர் மோடி, இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உள்பட இத்திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறார். பின் காலை 8.35 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் பயணம் செய்யும் சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

The post சந்திரயான்-3 விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து பிரதமர் மோடி இன்று பெங்களூரு வருகை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Bengaluru ,South Pole of the Moon ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி