×

காலை உணவு திட்டம் எந்த மாநிலத்திலும் இல்லாத அற்புதமான திட்டம்: வைகோ பெருமிதம்

சென்னை: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அற்புதமான திட்டம் காலை உணவு திட்டம் என வைகோ பெருமிதத்துடன் கூறினார். அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள சென்னை மாநகராட்சி, நடுநிலை பள்ளியில் காலை உணவு திட்டத்தை மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் மாணவ, மாணவியர்களுடன் ஒன்றாக அமர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்டார். அவருடன் மாமன்ற உறுப்பினர் அதியமான் உடனிருந்தார். பின்னர், வைகோ அளித்த பேட்டி:

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அற்புதமான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். ஏழை எளிய குடும்பத்தின் பிள்ளைகள் சரியான சாப்பாடு இல்லாமல் காலையிலேயே பட்டினியாக பள்ளிக்கு வந்து மயங்கி விழுந்த மாணவர்களை கண்ட முதலமைச்சர் அவர்களுக்காக காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். மதம், ஜாதி, கட்சி அனைத்தையும் கடந்து அத்தனை பிள்ளைகளுக்கும் உணவு வழங்க வேண்டும் என்று மனிதாபிமானத்தோடு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

செப்டம்பர் 15ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் நடத்தி ஜனாதிபதியிடம் வழங்கி உள்ளோம். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிற்கு கேடு செய்யும் வகையில் அகந்தையுடன் பேசி வருகிறார். எனவே ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post காலை உணவு திட்டம் எந்த மாநிலத்திலும் இல்லாத அற்புதமான திட்டம்: வைகோ பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Waco Pride ,CHENNAI ,India ,Vaiko ,Dinakaran ,
× RELATED 4 விமான நிலையங்களுக்கு மிரட்டல் சென்னை...