
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு ஆபத்தானது. ஏற்கனவே தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்து நடைமுறைப்படுத்தி வரும் நீட் தேர்வு காரணமாக ஆயிரக்கணக்கில் பயிற்சி மையங்கள் உருவாகி பணம் பறிக்கும் கும்பல் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ஒன்றிய பாஜ அரசு பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு என்று அறிவித்திருப்பது, கல்வித் துறையில் தொடர்ந்து நடத்தும் தாக்குதலாகும்.
இதில் அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா “பிற மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்கள் இந்தி மொழியை எதிர்ப்பின்றி ஏற்க வேண்டும் என்று அகங்காரத்துடன் பேசிய பேச்சுக்கு செயல் வடிவம் தரும் முயற்சியாகும். அரசின் வஞ்சகத் திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு அறிவிப்பை திருப்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பள்ளிக்கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.