×

விமானத்தில் கடத்தப்பட்ட ₹4 கோடி மதிப்பு ஹெராயின் பறிமுதல்-என்சிபி அதிகாரிகள் நடவடிக்கை

மும்பை : என்சிபி மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே கூறியதாவது: கார்கோவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, என்சிபி அதிகாரிகள் சத்ரபதி சிவாஜி  விமான நிலைய கார்கோ காம்ப்ளக்சில் கன்டெய்னர்களில் வந்த பொருட்களை சோதனையிட்டனர். அப்போது கூரியர் பார்சல் ஒன்றில், 700 கிராம் ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பழுப்பு வெள்ளை நிறத்தில் அந்தபவுடர் இருந்தது. கடந்த 1ம் தேதி இந்த பார்சல் வந்துள்ளது. இது தொடர்பாக, குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த கிருஷ்ண முராரி பிரசாத் என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். சம்மன் அனுப்பப்பட்டதன் பேரில் நேற்று அவர் என்சிபி அலுவலகத்துக் வந்தார். சர்வதேச போதைக்கும்பல் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனை மும்பையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து தென் ஆப்ரிக்காவுக்கு போதைப்பொருளை கடத்தி வந்து, அங்கிருந்து இந்தியாவுக்கு கூரியர் மூலம் அனுப்புகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டது ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராயின்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ₹4 கோடி, என்றார்….

The post விமானத்தில் கடத்தப்பட்ட ₹4 கோடி மதிப்பு ஹெராயின் பறிமுதல்-என்சிபி அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : NCP ,Mumbai ,Regional Director ,Sameer Wankhede ,
× RELATED தேசியவாத காங்கிரஸ் கட்சியை 2004ம் ஆண்டே...