×

கங்காவரம் துறைமுகத்துக்கு அதானி குழுமம் நிலம் கையகப்படுத்தியது எப்படி நடந்தது?.. ஜேபிசி விசாரணைக்கு காங்கிரஸ் கோரிக்கை

புதுடெல்லி: கங்காவரம் துறைமுகத்தை அதானி குழுமம் வாங்கியது தொடர்பாக கேள்வி காங்கிரஸ் எழுப்பியுள்ளது. இது தொடர்பான நாளிதழ் செய்தியை சுட்டி காட்டி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், பல துறைகளில் மோடி உருவாக்கிய ஏகாதிபத்தியம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கங்காவரம் துறைமுகத்தை கையகப்படுத்தியதை ஆதாரத்துடன் நிருபிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அதானி ஆந்திராவில் கடன் இல்லாத கங்காவரம் துறைமுகத்தை எப்படி ₹6,200 கோடிக்கு வாங்கினார்? என்பது போன்ற பல்வேறு குழப்பமான கேள்விகளுக்கு வழிவகுக்கிறது. கடன் சுமை நிறைந்த கிருஷ்ணபட்டினம் துறைமுகத்துடனான அதானியின் சொந்த ஒப்பந்தத்தை விட மிகக் குறைந்த தொகைக்கு இது எவ்வாறு கையகப்படுத்தப்பட்டது? நாடாளுமன்ற கூட்டு குழுதான் உண்மையை கண்டுபிடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

The post கங்காவரம் துறைமுகத்துக்கு அதானி குழுமம் நிலம் கையகப்படுத்தியது எப்படி நடந்தது?.. ஜேபிசி விசாரணைக்கு காங்கிரஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Adani Group ,Gangavaram ,port ,Congress ,JBC ,New Delhi ,Gangavaram Port ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...