×

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜாமீன் நீட்டிப்பு

புதுடெல்லி: பண மோசடி வழக்கில் சிபிஐ பதிவு செய்த எப்ஐஆரின் அடிப்படையில் டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறையினர் கடந்தாண்டு மே 30ம் தேதி கைது செய்தனர். அதன் பின்னர், அவரது உடல்நிலையை கருதி மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அவரது இடைக்கால ஜாமீன் மனு கடந்த மே 26ல் 6 வாரங்கள், ஜூலை 24ல் 5 வாரங்கள் என நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏஎஸ். போபண்ணா, எம்எம். சுந்தரேஷ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் செப்டம்பர் 1ம் தேதி வரை அவரது இடைக்கால ஜாமீனை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜாமீன் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Ex-Delhi ,Minister ,Extension ,New Delhi ,CBI ,Delhi Minister Satyender Jain ,Satyender Bail Extension ,Dinakaran ,
× RELATED அமைச்சர் செந்தில் பாலாஜியின்...