×

ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் வெளிநாட்டில் உயர்கல்வி பயில சிறப்பு பயிற்சி: சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னை: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய இனத்வர்களுக்கு வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வி பயில்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவர்கள் அயல்நாடு சென்று புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களில் உயர்க் கல்வி பயில அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட TOEFL, IELTS, GRE, GMAT போன்ற தகுதித் தேர்விற்கு பயிற்சிஅளிக்கப்பட உள்ளது.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் மற்றும் மேலாண்மை, தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல், வேளாண் அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வர்த்தகம், பொருளதார, கணக்கியல் நிதி, மனிதநேயம், சமூக அறிவியல். நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல், போன்ற படிப்புகளை அயல் நாடுகளில் பயில விரும்புவராக இருக்க வேண்டும்.

குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான செலவீனம் தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் அயல் நாடுகளிலுள்ள கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பினை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் வெளிநாட்டில் உயர்கல்வி பயில சிறப்பு பயிற்சி: சென்னை கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Adi Dravidians ,Chennai ,TADCO ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!