×

அதானி விவகாரத்தில் 2 குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடியவில்லை: உச்ச நீதிமன்றத்தில் செபி தகவல்

புதுடெல்லி: அதானி குழுமத்திற்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளைத் தவிர மற்ற அனைத்திலும் விசாரணையை முடித்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் செபி தெரிவித்துள்ளது. அதானி நிறுவன முறைகேடு தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டது. இதுபற்றி செபி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதானி நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் மூத்த வங்கியாளர்கள் அடங்கிய ஆறு பேர் கொண்ட நிபுணர் குழு மார்ச் மாதம் உருவாக்கப்பட்டது.

இதையடுத்து செபி தனது விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை காலக்கெடு விதித்தது உச்ச நீதிமன்றம். ஆனால் விசாரணையை முடிக்க செபி மேலும் 15 நாள் அவகாசம் கோரியிருந்தது. நேற்று விசாரணையின் நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் அதானி குழுமம் தொடர்பாக 24 விஷயங்களில் விசாரணை நடந்து வந்தது. அதில் 22 விஷயங்களில் விசாரணை முடிந்து விட்டன. இன்னும் 2 குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை மட்டுமே இன்னும் முடியவில்லை. வெளிநாடுகளில் இருந்து வரி தொடர்பாக 5 அம்சங்கள் கோரப்பட்டுள்ளன. அவை வந்ததும் முழுவிசாரணையும் முடிந்து விடும் என்று செபி குறிப்பிட்டு உள்ளது.

The post அதானி விவகாரத்தில் 2 குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடியவில்லை: உச்ச நீதிமன்றத்தில் செபி தகவல் appeared first on Dinakaran.

Tags : SEBI ,Supreme Court ,Delhi ,Adani Group.… ,Adani ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...