×

கனடா காலிஸ்தான் ஆதரவாளரின் சொத்துகள் முடக்கம்: என்ஐஏ அதிரடி

புதுடெல்லி: காலிஸ்தான் ஆதரவாளரான லக்பீர் சிங் சாந்து என்ற லாண்டா கடந்த 2017ம் ஆண்டு முதல் கனடாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமறைவான அவருக்கு பஞ்சாபின் தார்ன் தரண் மாவட்டத்தில் சொந்தமான சொத்துகளை முடக்க என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கிரியான் கிராமத்தில் உள்ள அவரது சொத்துக்களை உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ முடக்கியது. இவர் கடந்த மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

The post கனடா காலிஸ்தான் ஆதரவாளரின் சொத்துகள் முடக்கம்: என்ஐஏ அதிரடி appeared first on Dinakaran.

Tags : Canada ,Khalistan ,NIA ,New Delhi ,Lakhbir Singh Sandhu ,Dinakaran ,
× RELATED 20 ஓவர் உலகக்கோப்பை: கனடாவுக்கு எதிரான...