×

மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி: வாணாபுரம் அரசுப்பள்ளி மாணவிகள் தேர்வு

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், வட்ட அளவிலான 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் நந்தகுமார் வரவேற்றார். தொடர்ந்து தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் வாலிபால், எறிபந்து, ஹேண்ட் பால் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு எறிபந்து போட்டியில் வாணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர்.

மேலும் 19 வயதுக்குட்பட்ட எறிபந்து போட்டியில் 2ம் இடமும் பெற்று மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் உதவி தலைமை ஆசிரியர் இளங்கோவன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயசீலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக முகமதுநபி, பாபு, சரவணன், கோவிந்தன், மகேஷ், திருமூர்த்தி, தண்டாயுதபாணி, சுரேஷ், தினகரன், முத்துகிருஷ்ணன், சேகர் மற்றும் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி: வாணாபுரம் அரசுப்பள்ளி மாணவிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : District Level Volleyball Tournament ,Vanapuram Govt School Girls ,Thandarampatu ,Vanapuram Govt High School ,Volleyball Tournament ,Vanapuram Govt. School ,Dinakaran ,
× RELATED தண்டராம்பட்டு அருகே விபத்தில்...