×

போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நாகப்பட்டினம்: போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர்,தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வேளாங்கண்ணி பேராலய விழாவுக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். குற்றங்களை தடுப்பது மட்டுமின்றி அது நடைபெறாமல் இருக்கக் கூடியதாக அமைய வேண்டும். நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

குற்றங்களை தடுப்பது மட்டுமின்றி அது நடைபெறாமல் இருக்கக் கூடியதாக அமைய வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.

சட்டம்-ஒழுங்கை காக்கும் பணியை காவல்துறையினர் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். காவல்துறையின் செயல்பாடுதான் அரசுக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் அமைதியை காக்கும் பணியை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். வேளாங்கண்ணி பேராலய விழாவுக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

The post போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : CM G.K. Stalin ,Nagapattinam ,CM ,G.K. Stalin ,Chief Minister ,BM G.K. Stalin ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழு...