×

கம்பு பாலக்‌ ரொட்டி

தேவையான பொருட்கள்

கம்பு மாவு – ஒரு கப்‌
பாலக்கீரை – 70 கிராம்‌
உப்பு – தேவையான அளவு
நெய் அல்லது
எண்ணெய்‌ – தேவையான அளவு
தண்ணீர்‌ – தேவைக்கு.

செய்முறை:

பாலக்‌ கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்‌. பின்னர், கம்பு மாவில்‌ எண்ணெய்‌ 10 மில்லி கிராம்‌ எடுத்து ஊற்றி சிறிது உப்பையும்‌ மற்றும் நறுக்கி வைத்துள்ள கீரையையும் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல்‌ பிசையவும்‌. பின்னர், சிறு சிறு உருண்டையாக தயார்‌ செய்ய வேண்டும்‌. பிறகு சூடான தோசை கல்லில்‌ சப்பாத்தி போல்‌ கையால்‌ தட்டிப்போட்டு அதில்‌ சிறிது எண்ணெய்‌ ஊற்றி இரு புறமும்‌ வெந்தவுடன்‌ எடுக்க வேண்டும்‌.

The post கம்பு பாலக்‌ ரொட்டி appeared first on Dinakaran.

Tags :
× RELATED சைனீஸ் காளான் சூப்