×

ரூ.8 லட்சம் கடனுக்கு சூளைமேடு பகுதியில் முட்டை வியாபாரி காரில் கடத்தல்: நாமக்கல்லில் 3 பேர் கைது

சென்னை: ரூ.8 லட்சம் கடனுக்கு முட்டை வியாபாரியை காரில் கடத்திய 3 பேரை நாமக்கல்லில் போலீசார் கைது செய்தனர். சென்னை சூளைமேடு சக்தி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன்(46). முட்டை வியாபாரியான இவர், ஜாம் பஜார் பகுதியில் முட்டை கடை நடத்தி வருகிறார். சில ஆண்டுகளாக வியாபாரம் சரியில்லாததால் நாமக்கல்லில் இருந்து முட்டை அனுப்பும் நபர்களிடம் ரூ.8 லட்சம் வரை கடன் பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

முட்டைக்கான கடனை நாமக்கல்லில் உள்ள கார்த்திக் மற்றும் மணி ஆகியோர் பல முறை தனது நண்பர்களான சென்னை பம்மல் பகுதியை சேர்ந்த சரவணகுமார்(40) என்பவரின் மூலம் கேட்டுள்ளார். ஆனால் சந்திரசேகர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாமக்கல்லில் இருந்து கார்த்திக் மற்றும் மணி ஆகியோர் நேற்று முன்தினம் ரூ.8 லட்சம் கடனை திரும்ப பெற சென்னை வந்துள்ளனர். பிறகு தனது நண்பரான சரவணக்குமார் உடன் நேற்று சூளைமேடு பகுதியில் உள்ள முட்டை வியாபாரி சந்திரசேகரனை சந்தித்து பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அதற்கு அவர் மீண்டும் பணம் தர சில நாட்கள் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், மணி, சரவணக்குமார் ஆகியோர் முட்டை வியாபாரியான சந்திரசேகரை காரில் கடத்தி தங்களது சொந்த ஊரான நாமக்கல்லுக்கு கடத்தி சென்றுவிட்டனர். சம்பவம் குறித்து சந்திரசேகரன் மனைவி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சிசிடிவி பதிவுகளை பெற்று முட்டை வியாபாரி சந்திரசேகரனை கடத்திச் சென்ற காரின் பதிவு எண்களை வைத்து விசாரணை நடத்தினர். மேலும், நாமக்கல் போலீசார் உதவியுடன் காரில் கடத்தப்பட்ட முட்டை வியாபாரி சந்திரசேகரனை சூளைமேடு போலீசார் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

 

The post ரூ.8 லட்சம் கடனுக்கு சூளைமேடு பகுதியில் முட்டை வியாபாரி காரில் கடத்தல்: நாமக்கல்லில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chulaimedu ,Namakkal ,Chennai ,Dinakaran ,
× RELATED புழல் சிறைக் கைதி மருத்துவமனையில் பலி