×

பிரசவத்திற்காக சென்ற மனைவியிடம் தகவல் அளித்துவிட்டு கே.கே.நகரில் கோயில் பூசாரி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் (36). அதே பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பூசாரியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கலைவாணி. தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். அதனால் பெற்றோர் வசித்து வரும் தஞ்சாவூருக்கு 10 நாட்களுக்கு முன்பு சென்றுவிட்டார். வழக்கம் போல் நேற்று கோயிலில் பூஜை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார் வினோத். பின்னர் கலைவாணிக்கு போன் செய்து,‘ எனக்கு ரொம்ப மன அழுத்தமாக இருக்கிறது. அதனால் நான் தற்கொலை ெசய்து கொள்ள போகிறேன்’ என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

அதிர்ச்சியடைந்த கலைவாணி, அருகில் இருப்பவர்களுக்கு போன் மூலம் தகவலை தெரிவித்துள்ளார். உடனே அவர்களும் சென்று பார்த்தனர். வினோத், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கலைவாணிக்கு தகவல் அளித்தனர். மேலும் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வினோத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிரசவத்திற்காக சென்ற மனைவியிடம் தகவல் அளித்துவிட்டு கே.கே.நகரில் கோயில் பூசாரி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : K. K.K. ,Chennai ,K. K.K. Vinoth ,Muthumariamman Temple ,K. K.K. Temple ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...