×

திருத்துறைப்பூண்டி அரசு உதவி பெறும் பள்ளியில் பாட்டில்களில் பிளாஸ்டிக் குப்பை நிரப்பி வீசியெறியும் விழிப்புணர்வு

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் தினமும் எண்ணெய் பை, பால் பை, மளிகைப் பை, சாம்பு, சோப்பு, மேகி, மொறு மொறுப்பான திண்பண்டங்கள் அடைத்த பிளாஸ்டிக் பைகள் என 1 முதல் 100 பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த பிளாஸ்டிக் பைகளை எல்லாம் பிளாஸ்டிக் பாட்டிலில் நிரப்ப வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை பாட்டிலை நிரப்பி, சரியான மூடியுடன் குப்பைகளை சேகரிக்க வரும் துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்வதால், விலங்குகள் சிதறிய பிளாஸ்டிக் கழிவை சாப்பிடாது. பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் முறையாக அகற்றப்படும். குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்களுக்கும் எளிமையாக இருக்கும். ஒவ்வொரு வீடும் இந்தத் தேவையை உணர்ந்து, இதைச் செய்யத் தொடங்குங்கள் என்று நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இதை தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி சிங்களாந்தி விக்டரி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களின் அறிவுரைப்படி மாணவர்களுக்கு வீணான பிளாஸ்டிக் பாட்டில்களில் அதிக அளவில் பிளாஸ்டி பை குப்பைகளை நிரப்பும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்று தலைமை ஆசிரியர் அரிவித்த முதல் நாளே பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் குப்பையை நிரப்பும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.மேலும் மாணவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருத்துறைப்பூண்டி அரசு உதவி பெறும் பள்ளியில் பாட்டில்களில் பிளாஸ்டிக் குப்பை நிரப்பி வீசியெறியும் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Thiruthurapundi government ,Tiruthurapoondi ,Thiruthurapoondi government ,Thiruthurapoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டி நெடும்பலத்தில் 95...