×

ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

கோவை: ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கோவையில் நொய்யல் பெருவிழா ஆகஸ்ட் 25 முதல் 31-ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் இரு கருத்தரங்குகள், அதிகாலையில் வேள்விகள் நடைபெறும். மாலையில் கங்கையில் நடைபெறுவதுபோல ஏழு மேடைகள் அமைக்கப்பட்டு ஏழு ஆரத்திகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில், கோவையில் பேரூர் ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படும் 7 நாள் நொய்யல் பெருவிழாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

ஆளுநரின் பேச்சு அவ்வப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது; ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம். அந்நியர்களே ஆரியன், திராவிடன் என பிரிவினையை ஏற்படுத்தினார்கள். அந்நியர்கள் படையெடுப்புக்கு பிறகே நாம் தனித்து விடப்பட்டோம், பிரிவினையை ஏற்படுத்தினர். ஆங்கிலேயர்கள் நம் கலாசாரம், உயிர்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்தனர். இவ்வாறு தெரிவித்தார்.

The post ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Indians ,Governor RN Ravi ,Coimbatore ,Noyal ,Governor RN ,Ravi ,
× RELATED சர்வதேச மொபைல் எண்ணை பயன்படுத்தி...