×

கீழக்கரையில் ஆபத்தான குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை

கீழக்கரை : கீழக்கரை வடக்கு தெருவில் 50 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட 2 குடிநீர் தொட்டி உள்ளது. ஒரு தொட்டி 1.60 லட்சம் லிட்டர், மற்றொரு தொட்டி 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்த இரண்டு குடிநீர்த்தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்துள்ளது. மின் மோட்டார் அடிக்கடி பழுதாவதால் கீழக்கரை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கீழக்கரை நகர் 21 வார்டுகளில் 700க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன.

பொதுமக்கள் ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி வீட்டு இணைப்பு பெற்று வருகின்றனர். மாதந்தோறும் தண்ணீர் வரி செலுத்தி வருகின்றனர். 39 இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அடிக்கடி மின் மோட்டார் பழுதும் காரணமாக கீழக்கரை மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாமல் போகிறது. கடற்கரை ஓரங்களில் உப்பு தண்ணீராக வருவதால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் அரசு புதிதாக நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் வரை மின் மோட்டார் படிக்கட்டு கட்ட வேண்டும். 9 லட்சம் மீட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தொட்டி கட்ட வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய மோட்டார் வாங்கி கொடுக்க வேண்டும் என கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கீழக்கரையில் ஆபத்தான குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bottom North Street ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…