×

தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப் பாதையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

சேலம்: ஏற்காடு மலைப் பாதையில் குப்பனூர் வழியாக செல்லும் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு, சேலம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நேற்று ஏற்காட்டில் 10மிமீ அளவு மழையும், சேலத்தில் 66மிமீ அளவு மழையும் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்காட்டிற்கு செல்லும் மாற்று வழியான குப்பனூர் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.மண்சரிவில் காரணமாக பாறைகள் மற்றும் சிறிய அளவிலான கற்கள் பாதையில் கிடைப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மலைப்பாதையில் சாலையை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் குப்பனூரிலிருந்து ஏற்காடு செல்லும் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்காட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.       …

The post தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப் பாதையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Yercaud Hill Pass ,Salem ,Kuppanur ,Yercaud, ,Salem… ,Yercaud ,Dinakaran ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...