×

சில தலைவர்கள் தங்கள் மனதின் குரலை கூறுவதில் அக்கறையாக உள்ள நேரத்தில் மக்களின் மனக்குரலை நான் கேட்கிறேன்: ராகுல் காந்தி பேச்சு

லடாக்: சில தலைவர்கள் தங்கள் மனதின் குரலை கூறுவதில் அக்கறையாக உள்ள நேரத்தில் மக்களின் மனக்குரலை கேட்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லடாக்கில் 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, மோடியின் மனத்தின் குரல் உரையை குறிப்பிட்டு கார்கிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர்;

மக்களின் மனக்குரலை கேட்கிறேன்: ராகுல் காந்தி

சில தலைவர்கள் தங்கள் மனதின் குரலை கூறுவதில் அக்கறையாக உள்ள நேரத்தில் மக்களின் மனக்குரலை கேட்கிறேன். லடாக் மக்களின் ரத்தத்திலேயே காந்திஜி மற்றும் காங்கிரசின் கொள்கைகள் ஊறியுள்ளது. சில மாதங்களுக்கு முன் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரையை நடத்தினோம். நாடு முழுவதும் அன்பை பரப்புவதற்கு காங்கிரஸ் கட்சி முயலுவதாக ராகுல் காந்தி கூறினார்.

இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது: ராகுல் காந்தி

இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக லடாக்கில் பேசிய ராகுல் காந்தி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். ராணுவ ரீதியில் முக்கியமான இடம் லடாக் என்று கார்க்கிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். பிரதமர் மோடியோ, லடாக்கில் ஒரு அங்குல நிலத்தைக்கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று அப்பட்டமாக பொய் கூறுகிறார். இவ்வாறு தெரிவித்தார்.

 

The post சில தலைவர்கள் தங்கள் மனதின் குரலை கூறுவதில் அக்கறையாக உள்ள நேரத்தில் மக்களின் மனக்குரலை நான் கேட்கிறேன்: ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,LADACH ,Congress ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களின்...