×

அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டம் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

நகை: அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருக்குவளையில் கலைஞர் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்டது காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 31,000 அரசு பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர்; காலை உணவுத்திட்டத்தால் என் மனம் நிறைந்து, மகிழ்கிறது. மகிழ்ச்சிக்கு நான் காரணமாக இருப்பதால் எனக்கு மகிழ்ச்சி. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பர்; திமுக அரசு உயிர் கொடுத்துள்ளது. காலை உணவு திட்டம் எனக்கு மனநிறைவு அளிக்கிறது. மகளிர் உரிமை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்க இருப்பது தனக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. மதுரையில் தொடங்கிய காலை உணவு திட்டம் இப்போது 17 லட்சம் பேருக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்பற்று, சிந்தனைத் திறன் மூலம் தலைவர் ஆனவர் கலைஞர். தமிழ் மாணவர் மன்றத்தை சிறுவயதிலேயே தொடங்கியவர் கலைஞர். திருக்குவளையில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தியது கலைஞரின் மகனாக தமக்கு பெருமை தருகிறது. வாழ்க்கை முழுவதும் போராடியவர், தான் அடக்கம் செய்ய வேண்டிய இடத்தையும் போராடியே பெற்றவர்தான் கலைஞர். மதிய உணவு திட்டம் திமுக ஆட்சியில் செழுமைப்படுத்தப்பட்டது.

எம்ஜிஆர் தொடங்கிய சத்துணவு திட்டத்தில் வாரம் 5 நாட்கள் முட்டை வழங்கியவர் கலைஞர். 1921 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டமே அமலில் இருந்தது. சென்னையில் பள்ளி விழாவில் பங்கேற்றபோது மாணவ, மாணவிகள் கூறியதை கேட்டே காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே புதுப்புது திட்டங்களை கொண்டு வருவதில் முன்னோடியாக திகழ்கிறது.

மதிய உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகை பதிவு அதிகரிக்கும். 6 வயதுக்குட்பட்ட 92,000 குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைபாடு உள்ளது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சியில்தான் அரசாங்கத்தின் வளர்ச்சி உள்ளது. இது துரோணாச்சாரியார் காலம் அல்ல; ஏகலைவன் காலம். புதிய கல்விக் கொள்கை மூலம் ஏகலைவனிடம் கட்டை விரல் கேட்கும் துரோணாச்சாரியார் போல ஒன்றிய அரசு நடந்து கொள்கிறது என்று கூறியுள்ளார்.

 

The post அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டம் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,B.C. ,G.K. stalin ,BD ,Tiriruvulai ,Expansion ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...