×

அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நகை: அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருக்குவளையில் கலைஞர் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்டது காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 31,000 அரசு பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 1978 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டமானது விரிவுபடுத்தப்பட உள்ளது. முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள 31,000 தொடக்கப் பள்ளிகளில் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இதன்மூலம் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

The post அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,G.K. ,JEWEL ,BD ,G.K. Stalin ,Tiriruvulai ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...