- விஜயகாந்த்
- ஜனாதிபதி
- நிறுவன நிறுவனம்
- முதல் அமைச்சர்
- கி.மு.
- கெ ஸ்டாலின்
- சென்னை
- நிறுவனத்தின் தலைவர்
- தேமுதியா
- சனாதிபதி
- கழகத்தின் தலைவர்
- தின மலர்
![]()
சென்னை: தேமுதிக நிறுவன தலைவரும் எனது தோழருமான விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் 71வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. விஜயகாந்தின் பிறந்த நாளை ஒட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதுடன், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படுகின்றது. தேமுதிக தொண்டர்களால் வறுமை ஒழிப்பு தினமாக விஜயகாந்தின் பிறந்தநாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் விஜயகாந்த் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் சந்திக்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான விஜயகாந்த் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
The post தேமுதிக நிறுவன தலைவரும் எனது தோழருமான விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

