×

கூட்டுறவு சங்கங்களில் வருமானவரி பிடித்தம் விழிப்புணர்வு முகாம்

விருதுநகர், ஆக.25: விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வருமானவரி பிடித்தம் செய்வது குறித்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் செயலாட்சியர்களுக்கு, மதுரை சரக வருமான வரி அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. துவக்கத்தில் வங்கி உதவி பொதுமேலாளர் சீனிவாசன் வரவேற்றார். மதுரை சரக வருமான வரித்துறை துணை ஆணையாளர் மதுசூதன், வருமானவரி அதிகாரி வெங்கடேஷ்வரன், மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், செயலாட்சியர் ராஜலட்சுமி ஆகியோர் உரையாற்றினர்.

இக்கூட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் வருமானவரி பிடித்தம் செய்வது தொடர்பாக அதனுடைய முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இம்முகாமில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளர்/முதன்மை வருவாய் அலுவலர் இசக்கியப்பன், பொதுமேலாளர் சங்கரநாராயணன், ஜவஹர், வருமானவரி ஆய்வாளர் ராமநாதன், வரி ஆலோசகர் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் வங்கி உதவி பொதுமேலாளர் மனோகரன் நன்றி கூறினார்.

The post கூட்டுறவு சங்கங்களில் வருமானவரி பிடித்தம் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,District Central Cooperative Bank ,Virudhunagar District Central Cooperative Bank ,Awareness Camp ,Dinakaran ,
× RELATED நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதலை தடுப்பது எப்படி? வேளாண்துறை ஆலோசனை